களக்காடு, அக்.11: நெல்லை கிழக்கு மாவட்டம் நாங்குநேரியில் மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் சுடலைக்கண்ணு தலைமை வகித்தார். நெல்லை கிழக்கு மாவட்ட ெபாறுப்பாளர் கிரகாம்பெல், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் பற்றியும் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஜார்ஜ் கோசல், தலைமை செயற்குழு உறுப்பினர் சித்திக், பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவ ஐயப்பன், கனகராஜ், வள்ளியூர் பேரூர் செயலாளர் சேதுராமலிங்கம், மாவட்ட விவசாய அணி மாடசாமி, அரசு வழக்கறிஞர் பாலசுந்தர், சுப்பிரமணி, மாவட்ட பிரதிநிதி முத்துராஜ், வானுவாமலை, யூனியன் துணை சேர்மன் இசக்கிபாண்டி, மறுகால்குறிச்சி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் புஷ்பபாண்டி, சார்பு அணி மாவட்ட துணை அமைப்பாளர் மாயகிருஷ்ணன், சங்கர், சந்திரகலா, யூனியன் துணை சேர்மன் ஆதிபரமேஸ்வரன், கோபி, சுரேஷ், சுரேஷ்பாக்கியம், சிவா, சரவணன், குமார், வர்க்கீஸ் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தகுமாரி, சகுந்தலா, சந்திரன், சுபநடராஜன், இலங்காமணி, ராஜா, வெள்ளச்சாமி, எட்வின் உள்பட பலர் பங்கேற்றனர்.
+
Advertisement