களக்காடு, செப். 10: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, வெள்ளத்தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நாங்குநேரி நெடுஞ்சாலைதுறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்ட பகுதிகளில் உள்ள பாலங்களின் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் நீர்வழிப் பாதை சுத்தம் செய்யும் பணிகளும் முழுவீச்சீல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
+
Advertisement