சுரண்டை, அக். 9: பொதுமக்களின் சிரமத்தை குறைக்க சுரண்டை நகராட்சிக்கு தாமிரபரணி குடிநீரை முழுமையாக வழங்க வேண்டுமென தென்காசி மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிக்கு சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்தில் முழுமையாக வரி செலுத்தும் நகராட்சியாக சுரண்டை நகராட்சி திகழ்ந்து வருகிறது. சுரண்டை நகராட்சியில் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சுரண்டை நகராட்சி பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தினமும் 17 லட்சம் லிட்டர் தாமிரபரணி தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் தற்போது 10 லட்சம் லிட்டருக்கும் குறைவாகவே தண்ணீர் வழங்கி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் தாமிரபரணி தண்ணீர் இன்றி மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே சுரண்டை பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சுரண்டை நகராட்சிக்கு அனுமதிக்கப்பட்ட 17 லட்சம் குடிநீரை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கூறியுள்ளார்.
+
Advertisement