வீரவநல்லூர், அக். 8: சேரன்மகாதேவியில் பெட்ரோல் பங்க்கை சூறையாடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சேரன்மகாதேவி ஆர்.சி நடுநிலைப்பள்ளி அருகில் கடையத்தை சேர்ந்த செய்யது அலி என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பங்கிற்கு நேற்று முன்தினம் இரவு டூவிலரில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் பணியில் இருந்த ஊழியர்களை மிரட்டி பைக்கிற்கு பெட்ரோல் போடச் சொல்லியுள்ளனர். இதற்கு ஊழியர்கள் மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த இருவரும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பெட்ரோல் பங்கை சூறையாடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சேரன்மகாதேவி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்குள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+
Advertisement