நெல்லை, ஆக. 8: வீரவநல்லூர் அருகே பெண்ணை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகேயுள்ள பத்மநல்லூர், தெற்கு தெருவை சேர்ந்த சரஸ்வதி (48). இவர் கடந்த 6ம் தேதியன்று தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த, அதே ஊரைச் சேர்ந்த குமார் (52) என்பவர் சரஸ்வதியிடம் தகராறில் ஈடுபட்டு அவதூறாக பேசி மிரட்டல் விடுத்து சென்றார். இதுகுறித்து சரஸ்வதி வீரவநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்ஐ ஆஷா ஜெபகர் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி குமாரை கைது செய்தனர்.
+
Advertisement