களக்காடு,நவ.6: களக்காடு நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த சுமா சென்னை குன்றத்தூர் நகராட்சி ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சுரண்டை நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ராமதிலகம் களக்காடு நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் புதிய ஆணையராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு சக ஊழியர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
+
Advertisement
