களக்காடு,அக். 7: உலக வன விலங்குகள் வார விழாவையொட்டி திருக்குறுங்குடி வனத்துறை சார்பில் தூய்மைப் பணி நடந்தது. நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திருக்குறுங்குடி வனத்துறை சார்பில் திருமலைநம்பி கோயில் சோதனை சாவடி அருகே உலக வன விலங்குகள் வார விழா கொண்டாடப்பட்டது. தலைமை வகித்த திருக்குறுங்குடி வனச்சரகர் யோகேஷ்வரன், விழாவைத் துவக்கிவைத்தார். வனவர் அருணா முன்னிலை வகித்தார். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை (டிவிஎஸ்) கள இயக்குநர் லட்சுமி நாராயணன், சுற்றுச் சூழல், வன உயிரினங்களை பாதுகாப்பதின் முக்கியத்துவம், வனம், நீர் நிலைகளை பாதுகாப்பதால் ஏற்படும் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந் மெகா தூய்மைப் பணி நடந்தது. இதில் ஆர்வத்துடன் பங்கேற்ற வனத்துறை ஊழியர்கள், டிவிஎஸ் அறக்கட்டளை களப்பணியாளர்கள், வன விலங்கு சுற்றுச் சூழல் பாதுகாப்பு அறக்கட்டளையினர் உள்ளிட்ட ஏராளமானோர் திருமலைநம்பி கோயில் சாலைப்பகுதியில் நீர் வழிப்பாதை மற்றும் வனப்பகுதிகளில் தூய்மைப் பணிகளை முனைப்புடன் மேற்கொண்டனர்.
+
Advertisement