வீரவநல்லூர்,அக்.7: வீரவநல்லூர் அருகே மளிகை கடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். வீரவநல்லூர் அருகே புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன் (39). இவர் அருகேயுள்ள காருகுறிச்சி கிராமத்தில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த தெற்கு சங்கன்திரடு பகுதியைச் சேர்ந்த சத்ருகன் (42) என்பவர் கடனாக குளிர்பானம் கேட்டுள்ளார். இதற்கு சங்கரநாராயணன் மறுப்பு தெரிவிக்கவே சத்ருகன் கையில் வைத்திருந்த அரிவாளால் கடையின் ஷட்டரை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சங்கரநாராயணன் அளித்த புகாரின் பேரில் வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் வழக்குப்பதிந்து சத்ருகனை கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தார்.
+
Advertisement