களக்காடு, அக். 7: திருக்குறுங்குடி அருகேயுள்ள வன்னியன்குடியிருப்பை சேர்ந்தவர் மாயாண்டி. தொழிலாளி. இவரது மனைவி செல்வகனி (24). இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளனர். தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மாயாண்டிக்கும், செல்வகனிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 3ம் தேதி இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் செல்வகனி சீனிவாசபுரத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் தாயார் வீட்டிற்கு செல்லவில்லை. இதனால் பதறிய அவரது தாயார் அன்னலெட்சுமி இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான செல்வகனியை தேடி வருகின்றனர்.
+
Advertisement