பேட்டை, நவ. 5: பழையபேட்டையில் வீட்டைவிட்டு சென்றபோது மாயமான சிறுமி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை டவுன் அடுத்த பழைய பேட்டை நெல்லையாபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மகள் தனலட்சுமி (16). பாளையங்கோட்டையில் செயல்படும் தனியார் நர்சிங் கல்லூரியில் கல்வி பயின்று வந்த இவர், நேற்று காலை 11 மணி அளவில் வீட்டைவிட்டு வெளியே சென்ற போது திடீரென மாயமானார். இதனால் பதறிய பெற்றோர் தோழிகள், உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் சிறுமி குறித்த எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து பேட்டை போலீசில் ஆனந்தகுமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப் பதிவுசெய்த இன்ஸ்பெக்டர் விமலன், மாயமான சிறுமியை தேடி வருகிறார்.
+
Advertisement
