நெல்லை, நவ.5: நெல்லையில் மது குடிக்கும் பழக்கத்தை குடும்பத்தினர் கண்டித்ததால் ஏற்பட்ட விரக்தியில் டெய்லர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நெல்லை வண்ணார்பேட்டை சாலைத் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் (48). டெய்லர் வேலை பார்த்துவந்த இவர் மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. மேலும் அடிக்கடி குடித்து வந்ததை குடும்பத்தினர் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்திக்கு ஆளான மாரியப்பன், சம்பவத்தன்று திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இதுகுறித்து தெரியவந்த அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் விரைந்துவந்த பாளை போலீசார், மாரியப்பனின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
+
Advertisement
