களக்காடு, ஆக.5 கொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் மன உளைச்சலை போக்க ஆல் பாஸ் வழங்கினோம் என்று களக்காட்டில் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். நெல்லை மாவட்டத்தில், மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுபயணம் செய்து வரும் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவில் களக்காட்டில் பிரசாரம் செய்தார். அவர் பேசுகையில், களக்காடு பகுதி...
களக்காடு, ஆக.5 கொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் மன உளைச்சலை போக்க ஆல் பாஸ் வழங்கினோம் என்று களக்காட்டில் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். நெல்லை மாவட்டத்தில், மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுபயணம் செய்து வரும் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவில் களக்காட்டில் பிரசாரம் செய்தார். அவர் பேசுகையில், களக்காடு பகுதி விவசாயம் நிறைந்த பகுதி, களக்காடு நகராட்சியில் இப்போது எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம், இதை பார்க்கும் போது அடுத்த ஆண்டு தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. அதிமுக ஜனநாயக கட்சி, என்னை போன்ற சாதாரண விவசாயி கூட கட்சி பொது செயலாளராக முதல்வராக வர முடியும். மத்தியில் பாஜ ஆட்சி செய்த போது, அதில் அதிமுக அங்கம் வகித்த போது, காவேரி பிரச்னை ஏற்பட்டது.
அப்போது ஆளும் கட்சியில் அங்கம் வகித்த போதும், தமிழகத்திற்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து 22 நாட்கள் நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்தோம். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஏழை, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 இட ஒதுக்கீடு மூலம் 2818 மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு தேர்வாகி, இன்று 1 பைசா செலவு இல்லாமல் மருத்துவம் படித்து வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் 1 ஆண்டு பள்ளிகள் செயல்படாத போது மாணவர்கள் மன உளைச்சலை போக்க ஆல் பாஸ் வழங்கினோம் என்றார். அதன் பின் நீட் தேர்வு மூலம் மருத்துவபடிப்பிற்கு தேர்வான களக்காடு வடமலைசமுத்திரத்தை சேர்ந்த மாணவர் சுதன் அஸ்வினை பாராட்டி எடப்பாடி பழனிசாமி, ரூ 1 லட்சமும், லேப்டாப்பும் வழங்கினார். பிரசாரத்துக்கு நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இசக்கி சுப்பையா எம்எல்ஏ முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன், பாளை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், பாளை தெற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் வானுவாமலை, மாணவரணி செயலாளர் சக்தி உள்பட திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.