திருச்சி, ஏப்.11: வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த டூவீலர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்சி ஆர்.சி நகர் அஞ்சல்காரன் தெரு 3வது கிராசை சேர்ந்தவர் காதர் செரீப் (36). இவர் ஏப்.9ம் தேதி இரவு, தன் வீட்டு வாசலில் டூவீலரை நிறுத்திவிட்டு தூங்க சென்றார். காலையில் எழுந்து வந்து பார்த்தபோது, டூவீலர் மாயமாகி இருந்தது. அதிர்ச்சியடைந்த காதர் செரீப், இதுகுறித்து எ.புதுார் போலீசில் புகாரளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement

