Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பேக்கரி இயந்திரம் வாங்கி தருவதாக ரூ.70 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது

திருச்சி, ஆக.2: பேக்கரி இயந்திரம் வாங்கி தருவதாக கூறி ரூ.70 ஆயிரம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை கண்ணுடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிக்கந்தர் பாஷா (39). இவர் சென்னையிலுள்ள பேக்கரி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருச்சி கம்பரசம்பேட்டை சேர்ந்த ஒரு நபர் வாட்ஸ்அப் குழு மூலம் அறிமுகமாகி தற்சமயம் உறையூரில் தங்கி உள்ளார்.

இந்நிலையில் அந்த நபர் ஜூன்.30ம் தேதி பேக்கரி இயந்திரம் வாங்கித் தருவதாக கூறி சிக்கந்தர் பாஷாவிடம் ரூ..70 ஆயிரம் பணத்தை ஜிபே மூலம் பெற்று உள்ளார். பின்னர் இயந்திரம் வாங்கி தராமல் பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் போில் போலீசார் வழக்கு பதிந்து உறையூா் நாச்சியார் பாளையம் பகுதியைச் சேர்ந்த ஷேக் முகமது(26) கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.