லால்குடி, ஆக். 2: லால்குடி அருகே இவெள்ளனூர் - புஞ்சை சங்கேந்தி தார் சாலை மற்றும் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் இளம்வழுதி ஆய்வு மேற்கொண்டார். திருச்சி மாவட்டம் திருச்சி - அரியலூர் சாலை இ.வெள்ளனூர் ஊராட்சியிலிருந்து புஞ்சைசங்கேந்தி செல்லும் சாலை யில் தார்ச்சாலையை அகலப்படுத்தி விரிவாக்கம் செய்தும் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது.
நடைபெற்று வரும் தார்ச்சாலை விரிவாக்கம் மற்றும் தடுப்பு சுவர் பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் இளம்வழுதி ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின் போது, கோட்ட பொறியாளர் கண்ணன், லால்குடி நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் சிட்டிபாபு, உதவி பொறியாளர் கணபதி, சாலை ஆய்வாளர் சத்தியசீலன் உடன் இருந்தனர்.