துவரங்குறிச்சி, ஆக.4: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி அருகே உள்ள உசிலங்காட்டு கருப்பர் கோயிலில் 8 ஊர் பொதுமக்கள் சேர்ந்து கொண்டாடும் திருவிழா ஆடிப்படையல் விழா. விழாவையொட்டி உசிலங்காட்டு கருப்பருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகங்களும் செய்யப்பட்டன. தொடர்ந்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். இதில் கஞ்சநாயக்கன்பட்டி, செட்டியபட்டி, ராசிபட்டி, சிங்கிலி...
துவரங்குறிச்சி, ஆக.4: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி அருகே உள்ள உசிலங்காட்டு கருப்பர் கோயிலில் 8 ஊர் பொதுமக்கள் சேர்ந்து கொண்டாடும் திருவிழா ஆடிப்படையல் விழா. விழாவையொட்டி உசிலங்காட்டு கருப்பருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகங்களும் செய்யப்பட்டன. தொடர்ந்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். இதில் கஞ்சநாயக்கன்பட்டி, செட்டியபட்டி, ராசிபட்டி, சிங்கிலி பட்டி , வடக்கு எல்லை காட்டப்பட்டி, தெற்கு எல்லைக்காட்டுப்பட்டி முத்துநாயக்கன்பட்டி ,காவல்காரன்பட்டி ஆகிய எட்டு ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி உசிலங்காட்டு கருப்பசாமிக்கு 20க்கும் மேற்பட்ட ஆடுகளை அறுத்து கோவில் வளாகத்திலேயே சமையல் செய்து இப்பகுதி பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அன்னதானம் வழங்கப்பட்டது.