வேலாயுதம்பாளையம், ஆக. 4: தளவாபாளையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம் வாங்கல் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தளவாபாளையம் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. வாங்கல் வட்டார ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவர் டாக்டர் ரூபன்ராஜ் தலைமை வகித்தார். சுகாதாரசெவிலியர்கள், சுகாதார தன்னார்வலர் குழுவினர் பங்கேற்றனர்.
இதில் முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், பொதுமக்களுக்கு ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டது.
ரத்தத்தில் சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்தனர். மேலும் காய்ச்சல், தலைவலி, இருமல், தொண்டைவலி, கால் வலி, உடல் வலி உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து மருந்து, மாத்திரை வழங்கப்பட்டது.