ஆறுமுகநேரி, அக். 31: ஆவரையூரில் சேதமடைந்த நிலையிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை இடித்து அகற்றுவது; சேனையர் தெரு, புதுநகர் முதல் குறுக்குத்தெரு உள்ளிட்ட வீதிகளில் புதிதாக பேவர்பிளாக் சாலை அமைப்பது என பேரூராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆத்தூர் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் தலைவர் கமால்தீன் தலைமையில் நடந்தது. பேரூராட்சி நிர்வாக அதிகாரி மகேஸ்வரி, துணைத்தலைவர் மகேஸ்வரி முருகப்பெருமாள் முன்னிலை வகித்தனர். இதில் வரவு செலவு திட்ட அறிக்கை வாசித்து சரிபார்க்கப்பட்டது. நிகழ்வில் பேரூராட்சி கவுன்சிலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஆத்தூர் பேரூராட்சி சேனையர் தெரு, புதுநகர் முதல் குறுக்குதெரு உள்ளிட்ட இடங்களில் புதிதாக பேவர்பிளாக் சாலை அமைப்பது. ஆவரையூரில் சேதமடைந்த நிலையிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை இடித்து அகற்றுவது. ஆத்தூர் பேரூராட்சியில் கால்நடை மருத்துவமனை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது. வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் பேரிடர் மேலாண்மைக்கு தேவையான தளவாட சாமான்கள் மற்றும் உபகரணங்களை கொள்முதல் செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
+
Advertisement 
 
  
  
  
   
