தூத்துக்குடி, ஆக. 29 :தூத்துக்குடி அருகே செப்டிக் டேங்கில் தவறி விழுந்த நாய், மற்றும் அதன் 4 குட்டிகளை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை வஉசி நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் செப்டிக் டேங்கில் நாய் தவறி விழுந்த விட்டதாக வீட்டின் உரிமையாளர் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சிப்காட் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். சம்பவ இடத்தில் மூடி போடப்படாத செப்டிங் டேங்கில் நாய் மற்றும் குட்டிகளின் சத்தம் கேட்டதை கண்டனர். அந்த மிகவும் குறுகலான ஓட்டைப் பகுதியில் தீயணைப்பு வீரர் சக்திவேல் என்பவர் உள்ளே இறங்கி கயிறுகள் மூலம் முடிச்சுகள் போட்டு கட்டி, வெகு நேரமாக போராடி ஒரு நாய் மற்றும் 4 குட்டிகளையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் நாயையும் அதன் 4 குட்டிகளையும் பாதுகாப்பான இடத்தில் விட்டனர். மேலும், செப்டிங் டேங்கை மூடி வைக்குமாறு வீட்டு உரிமையாளருக்கு தீயணைப்பு துறையினர் அறிவுரை வழங்கி சென்றனர்.
+
Advertisement