பலத்த சூறைக்காற்று எதிரொலி தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை பலத்த சூறைக்காற்று எதிரொலி தூத்துக்குடியில் விசைப்படகுகள்
தூத்துக்குடி, செப்.27: வங்கக்கடலில் வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, தெற்கு ஒடிசா- வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக வங்கக்கடலிலும், மன்னார் வளைகுடா பகுதி கடற்பகுதியில் 45 கி.மீட்டரிலிருந்து 55 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து நேற்று தூத்துக்குடியில், நாளையும் கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 265 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த எச்சரிக்கை காரணமாக இன்றும் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.