குளத்தூர், ஆக.27: தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அண்ணாநகரை சேர்ந்த சுப்பிரமணியனின் மகன் முத்துக்குமார்(36) கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுலோச்சனா. இவர்களது மகள் சுபமாலினி. நேற்று முன்தினம் (25ம் தேதி( காலை வீட்டில் உள்ள குளியல் அறைக்கு சென்ற முத்துக்குமார் தலைசுற்றுவதாக மனைவியிடம் கூறினார். பின்னர் படிக்கட்டில் ஏறிய முத்துக்குமார் நிலை தடுமாறி அதில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்ட உறவினர்கள் குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முத்துக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் குளத்தூர் எஸ்ஐ அந்தோணி திலிப் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
+
Advertisement