செய்துங்கநல்லூர், நவ.26: கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கருங்குளம் வட்டார அளவிலான ஊராட்சிகளில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நாளை காலை 10 மணியிலிருந்து கருங்குளம் யூனியனில் வைத்து நடைபெறுகிறது. இந்த முகாமில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பல்வேறு உபகரணங்கள் வழங்கும் முகாம் நடைபெற இருப்பதால் கருங்குளம் வட்டார அளவிலான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு கருங்குளம் வட்டார அனைத்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
+
Advertisement


