கயத்தாறு, நவ.26:கயத்தாறு அருகே பைக் திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கயத்தாறு காவல் சரகத்திற்கு உட்பட்ட சவலாபேரியைப் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் வேல்முருகன் (34). இவர் கடந்த 14ம்தேதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோமு என்பவரின் கிணற்றின் அருகே தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்பு இரவு 10.30 மணிக்கு வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதுகுறித்து கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு போது மூன்று வாலிபர்கள் வேல்முருகனின் பைக்கை எடுத்துச் சென்றது தெரியவந்தது. அதன் அடிப்படையில் விசாரணை செய்ததில் அவர்கள் நெல்லை அருகே கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த லட்சுமணன் மகன் காளிமுத்து (21), கிருஷ்ணாபுரம் செல்வன்லட்சுமி நகரை சேர்ந்த முருகன் மகன் இசக்கிமுத்து என்ற இட்லி (20), தூத்துக்குடி சவேரியார்புரம் அருண்ராஜ் மகன் கிறிஸ்டோபர் மதியழகன் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
+
Advertisement


