உடன்குடி,அக்.26: உடன்குடி அருகே சாலையோரம் இறந்துகிடந்த பசுவை பார்த்து வாயில்லா ஜீவன்கள் கண்ணீர் விட்டு தவித்த காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது. உடன்குடி பகுதியில் வீடுகளில் மாடு வளர்க்கும் பலர், மேய்ச்சலுக்காக காலையில் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிவைப்பதும் மாலையில் அம்மாடுகள் வீடுகள் திரும்புவதும் வழக்கம். இந்நிலையில் உடன்குடி- கொட்டங்காடு பிரிவு ரோட்டிலிருந்து குலசேகரன்பட்டினம் செல்லும் பிரிவு சாலையில். சாலையோரத்தில் பசுமாடு ஒன்று இறந்துக்கிடந்தது. மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடு ஏதேனும் வாகனம் மோதி விபத்து சிக்கி அல்லது நோய், வாய்பட்டு இறந்ததா என தெரியவில்லை. இச்சூழ்நிலையில் காலையில் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் மாலையில் வீட்டுக்கு திரும்பி வரும் வழியில் இறந்த கிடந்த மாட்டை பார்த்து பரிதவித்து கண்ணீர்விட்டது. இந்த இடத்தை கடந்து செல்ல மனமின்றி அதை முகர்ந்து பார்த்தபடி கண்ணீர் சிந்தி கொண்டிருந்தது வாயில்லா இந்த ஜீவன்களின் பாச போராட்டம் பார்க்க பரிதாபமாக இருந்தது. காண்போரை கண்கலங்க வைத்தது.
+
Advertisement


