ஓட்டப்பிடாரம், செப். 26: புளியம்பட்டி அருகே மருதன்வாழ்வு ஊராட்சிக்கு உட்பட்ட அய்யப்பபுரம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடையை சண்முகையா எம்எல்ஏ திறந்துவைத்தார். ஓட்டப்பிடாரம் யூனியன், மருதன்வாழ்வு ஊராட்சிக்கு உட்பட்ட அய்யப்பபுரம் கிராம மக்கள் நீண்டகாலமாக மருதன்வாழ்வு கிராமத்தில் உள்ள கடைக்குச்சென்று குடிமைப்பொருட்கள் வாங்கிவந்த நிலையில் தங்கள் கிராமத்திலேயே பகுதிநேர ரேஷன் கடை அமைத்துத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட சண்முகையா எம்எல்ஏ மேற்கொண்ட முயற்சியால் டி. அய்யப்பபுரம் கிராமத்திலேயே அமைக்கப்பட்ட பகுதி நேர ரேஷன் கடையின் திறப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சண்முகையா எம்எல்ஏ, பகுதி நேர ரேஷன் கடையை திறந்துவைத்து பொதுமக்களுக்கு குடிமைப் பொருட்கள் வழங்கினார். நிகழ்வில் கூட்டுறவு சார் பதிவாளர் ரேச்சல் தெபேரா, வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஸ்வரி, ஒன்றிய பொறியாளர் செந்தில்குமார் கூட்டுறவு சங்க செயலாளர் ராமலட்சுமி, ஊராட்சி செயலாளர் ராஜன், விஏஓ சண்முகராஜ் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
+
Advertisement