Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

விளாத்திகுளத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட பேரவை கூட்டம்

விளாத்திகுளம், செப்.26: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் விளாத்திகுளம் வட்டக்கிளையின் வட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. விளாத்திகுளம் - எட்டயபுரம் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகம் முன்பு நடந்த கூட்டத்திற்கு வட்டத்தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். வட்டத்துணைத் தலைவர்கள் ஆனந்தச்செல்வம், பரணிதரன் ஆகியோர் வரவேற்றனர். வட்டச்செயலாளர் மாரிச்செல்வம் அறிக்கை மற்றும் வரவு செலவு விபரத்தினை சமர்பித்தார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத்தலைவர் மூர்த்தி, தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்க வட்ட செயலாளர் சந்திரசேகரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் ராஜமுருகேஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் முருகன் சிறப்புரையாற்றினார். வட்ட இணைச் செயலாளர் ஷோபனா, வட்ட தணிக்கையாளர் ராமசுந்தரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.