உடன்குடி, நவ. 25: மணப்பாடு பாலத்தில் லாரி மோதிய விபத்துக்குள்ளானதில் டிரைவர் படுகாயமடைந்தார். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பெருமங்களூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் சுப்பையா மகன் அடைக்கலராஜ்(29). இதே பகுதியில் உள்ள மீன் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று அதிகாலை உடன்குடி அருகேயுள்ள மணப்பாடு கிராமத்திற்கு மீன் லோடு ஏற்றுவதற்கு லாரியில் வந்துள்ளார். மணப்பாடு பாலம் வளைவில் லாரி வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் அடைக்கலராஜ் படுகாயமடைந்தார். அவரை மீட்டு திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement



