திருச்செந்தூர், அக். 25: திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் பசுமை சித்தர் சிவ பூஜை செய்து வழிபட்டார். தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்தவர் பசுமை சித்தர். ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழாவிற்கு திருச்செந்தூர் வந்து 6 நாட்களும் விரதம் மேற்கொண்டு உலக மக்கள் அனைவரும் சுபிட்சமாக வாழ வேண்டியும், உலக மக்களின் நன்மைக்காக கடற்கரையில் மணலால் சிவலிங்கம் செய்து வழிபாடு செய்வது வழக்கம். இந்தாண்டும் நேற்று கடற்கரையில் மணலால் சிவலிங்கம் செய்து சிவ பூஜை செய்து வழிபாடு செய்தார். இதேபோல் கோயில் வளாகத்தில் பக்தர்கள் குழுவாக அமர்ந்து முருகன் பக்தி பாடல்கள் பாடி விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
+
Advertisement
