தூத்துக்குடி, செப். 25: தூத்துக்குடியில் மீனவர் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி, லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் விஜய் என்ற பானை விஜய் (22). இவர் கடந்த மாதம் 22ம்தேதி தூத்துக்குடி மச்சாது பாலம் அருகே முன்விரோதம் காரணமாக உப்பளத்தில் உள்ள ஷெட்டில் நண்பர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வழக்குப் பதிந்த தூத்துக்குடி தென்பாகம் போலீசார் விஜய்யின் நண்பர்கள் உள்ளிட்ட 6 பேரை ஏற்கனவே கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய தூத்துக்குடி மட்டக்கடையைச் சேர்ந்த கணேசனின் மகன் பிரபு வினோத்குமார் (28) என்பவரை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
+
Advertisement