தூத்துக்குடி, அக். 24: தூத்துக்குடி தாளமுத்துநகர் சிலுவைப்பட்டி பகுதியில் உள்ள ஒரு விநாயகர் கோயிலில் உள்ள பூட்டை கடந்த அக்.18ம் தேதி மர்மநபர்கள் உடைத்தனர். மேலும் அக்கோயிலில் உள்ள வெண்கல மணி, கோயில் குத்துவிளக்கு, வெண்கல தட்டு உள்ளிட்ட ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பூஜை பொருட்களை திருடிச்சென்றனர். பின்னர் இதுகுறித்து கோயில் தர்மகர்த்தா அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர்களான முத்துக்குமாரின் மகன் கருப்பசாமி (19), கருப்பசாமியின் மகன் பாலவிக்னேஷ் (22), மாரிமுத்துவின் மகன் முகேஷ் (20) ஆகியோர் மேற்கண்ட கோயிலின் பூட்டை உடைத்து பூஜை பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைதுசெய்த போலீசார். அவர்களிடம் இருந்த வெண்கல மணி, வெண்கல தட்டு, குத்து விளக்கு போன்ற ரூ.20,000 மதிப்புள்ள பூஜை பொருட்களை மீட்டனர். மேலும் இதில் வேறு யாரேனுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


