ஆறுமுகநேரி, அக். 24: ஆத்தூர் சண்முகசுந்தர நாடார் பள்ளியில் நடந்த இருபெரும் விழாவில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஆத்தூர் சி.சண்முகசுந்தர நாடார் பள்ளியில் தீபாவளி பண்டிகை மற்றும் கலை திருவிழா என இருபெரும் விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் வண்ண வண்ண கலை நிகழ்ச்சிகள் நடத்தி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். இதில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அத்துடன் சிறப்பிடம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில் மாணவ- மாணவிகள், பெற்றோர், ஆசிரியர்கள்- அலுவலர்கள், பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை சி.சண்முகசுந்தர நாடார் மேல்நிலைப்பள்ளி நிர்வாக அலுவலர் கந்தசாமி, தொடக்கப்பள்ளி மற்றும் மழலையர் தொடக்க பள்ளி நிர்வாக அலுவலர் ரஞ்சித்சிங், தலைமை ஆசிரியர்கள் கிரிஜா, ரோசி எமரென்ஸ் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
+
Advertisement


