தூத்துக்குடி, செப்.24: தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 28வது பொதுப்பேரவைக்கூட்டம் வங்கி தலைமையலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் வங்கியின் இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குநர் காந்திநாதன் தலைமை வகித்தார். மண்டல இணைப்பதிவாளர் ராஜேஷ் சிறப்புரையாற்றினார். கோவில்பட்டி சரக துணைப்பதிவாளர் ராமகிருஷ்ணன், தூத்துக்குடி சரக துணைப்பதிவாளர் கலையரசி, டான்பெட் துணைப்பதிவாளர் காந்திராஜ் மற்றும் உதவி இயக்குநர் கால்நடை பராமரிப்புத்துறை ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். வங்கியின் பொதுமேலாளர் சரவணன் வரவேற்புரையாற்றினார். உதவி பொது மேலாளர் சீனிவாசன் ஆண்டறிக்கை, பேரவைக்கூட்ட பொருள்கள் வாசித்தார். உறுப்பினர்களின் கரவொலி மூலம் பேரவை கூட்ட பொருள்கள் அங்கீகரிக்கப்பட்டது. பேரவைக்கூட்ட தலைவர் இணைப்பதிவாளர், மேலாண்மைஇயக்குநர் தலைமையுரையில் வங்கியின் தொடர் வளர்ச்சிக்கு உறுப்பினர்களின் பங்கு இன்றியமையாதது என தெரிவித்தார். வங்கியின் உதவி பொது மேலாளர் செல்வி நன்றி உரையாற்றினார்.
+
Advertisement