எட்டயபுரம்,செப்.24: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி எட்டயபுரம் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க எட்டயபுரம் தாலுகா செயலாளர் ரவீந்திரன் தலைமை வகித்தார். தலைவர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார். கடந்த ஆண்டு காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கனமழையால் பாதிக்கப்பட்ட பாசி, உளுந்து உள்ளிட்ட பயிர் வகைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தொடர்ந்து பல வருடங்களாக விவசாய நிலங்களை சீரழித்து வரும் காட்டு பன்றிகள் தொல்லையில் இருந்து விவசாயிகளை காப்பாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட சிபிஐ உதவி செயலாளர் பாலமுருகன், ஏஐடியூசி கட்டுமான சங்க மாநில செயலாளர் சேது, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் லெனின்குமார், நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, நல்லையா, ஜெயராம், கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement