சாத்தான்குளம்,செப்.23: தெற்குநரையன் குடியிருப்பில் சாலையோரம் விபத்து ஏற்படுத்திடும் வகையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு நரையன்குடியிருப்பில் இருந்து மணிநகர் சாலையோரம் மக்களுக்கு மின்சாரம் விநியோகிக்கும் வகையில் இருப்பினாலான மின்கம்பம் நடப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்திற்கு எர்த் கிடைக்கும் வகையில் கம்பி சாலை அருகில் நடப்பட்டுள்ளது. மின்கம்பம் கரையில் இருந்தாலும் அதிலிருந்து வரும் கம்பி சாலை அருகில் உள்ளதால் அது இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் கம்பியில் மோதி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் இந்த சாலையில் வருபவர்கள் கம்பி தெரியாமல் மோதி காயமடையும் சூழலும் உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, மின்வாரிய அதிகாரிகள் இதனை கவனித்து, மின்கம்பம் அருகில் சாலை ஓரத்தில் உள்ள எர்த் கம்பியை மாற்றி அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர் லூர்துமணி மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement