நாசரேத், செப். 22: புத்தாக்க மேம்பாட்டு பயிற்சி நிறைவு செய்த நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு புத்தாக்க நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய அறிவுசார் நிறுவனம் சார்பில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம், பல்வேறு பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இப்பயிற்சியில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியின் 11ம் வகுப்பு மாணவர்கள், 30 பேர் இணைந்து 6 குழுக்களாக பயிற்சி பெற்று வருகின்றனர். பல்வேறு படிநிலைகளில் உள்ள பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளது. சான்றிதழ்களை பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் சுதாகர், தலைமை ஆசிரியர் குணசீலராஜ் மற்றும் ஆசிரியர்கள்- அலுவலர்கள் பாராட்டினர். ஏற்பாடுகளை பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்ட வழிகாட்டி ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் செய்திருந்தார்.