தூத்துக்குடி, ஆக.22: மேலஅரசடி, தருவைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகர மின் விநியோக செயற்பொறியாளர் சின்னதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி அரசடி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பட்டிணமருதூர், உப்பளபகுதிகள், சில்லாநத்தம், சாமிநத்தம், மேலஅரசடி, கீழஅரசடி, தருவைகுளம், வேலாயுதபுரம், எட்டையாபுரம் ரோடு வடபுறம் பகுதிகள், வாலசமுத்திரம், கிழக்கு கடற்கரை சாலை, புதூர் பாண்டியபுரம் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement