தூத்துக்குடி, நவ. 21: தூத்துக்குடி சகாயபுரத்தை சேர்ந்தவர் பினோ(29). இவரது மனைவி ஜெமிலா (25). இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. இதற்கிடையே கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த ஜெமிலா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து டவுன் ஏஎஸ்பி மதன் வழக்கு பதிவு செய்துள்ளார். ஆர்டிஓ பிரபு விசாரணை நடத்தி வருகிறார்.
+
Advertisement


