சாத்தான்குளம், நவ. 21: சாத்தான்குளம் டிஎன்டிடிஏ புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகளை காப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்து கருத்தரங்கை தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த சேவை மைய வழக்கு பணியாளர் கனகவல்லி சிறப்புரை ஆற்றினார். பெண் குழந்தைகளை எவ்வாறு காப்பது குறித்தும், குழந்தை திருமண தடைச் சட்டம் மற்றும் போக்சோ விழிப்புணர்வு குறித்தும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. சாத்தான்குளம் ஊர்காவலர் அமைப்பை சார்ந்த மணிமாலா, சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement


