திருச்செந்தூர், நவ. 21: திருச்செந்தூரில் பாஜ சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமை வகித்து நிர்வாகிகளுக்கு சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனைகளை வழங்கினார். தொகுதி அமைப்பாளர் ராஜகண்ணன், இணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் சண்முகசுந்தரம், மாவட்ட பொதுச்செயலாளர் கனல் ஆறுமுகம், மாவட்ட துணை தலைவர் நவமணிகண்டன், துணை செயலாளர்கள் சபரிமலை, நாச்சியார், வசந்தி, மண்டல தலைவர்கள் செல்வகுமரன், பேச்சித்துரை, தங்ககண்ணன், சிவஜோதி, பாண்டியன், சங்கரகுமார், பாப்பா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். திருச்செந்தூர் நகர பொதுச்செயலாளர் கார்த்திகை கந்தன் நன்றி கூறினார்.
+
Advertisement


