செய்துங்கநல்லூர், ஆக.21: கருங்குளம், செய்துங்கநல்லூர் பகுதியில் பாலிதீன் கவர்களை பயன்படுத்தும் கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்ததுடன் அங்கிருந்த கவர்களை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் அதிகாரிகள் பாலிதீன் கவர் பயன்படுத்தும் கடைகளை கண்டறிந்து ஆய்வு செய்து அபராதம் விதித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் செய்துங்கநல்லூர், கருங்குளம் உள்ளிட்ட பஜார் பகுதியில் உள்ள கடைகள், பேக்கரிகளில் கருங்குளம் யூனியன் தனி அலுவலரும் பிடிஓவுமான ஆறுமுகநயினார் மற்றும் அதிகாரிகள் கடைகளில் சோதனை செய்தனர். பின்னர் கடைகளில் வைத்திருந்த பாலிதீன் கவர்களை பறிமுதல் செய்ததோடு கடை உரிமையாளருக்கு அபராதமும் விதித்தனர். தொடர்ந்து பாலிதீன் கவர் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து கடைக்காரர்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தினர். இதில் கருங்குளம் யூனியன் அதிகாரிகள், ஊழியர்களும் பங்கேற்றனர்.
+
Advertisement