உடன்குடி, ஆக.21: உடன்குடி அருகே சிறுநாடார்குடியிருப்பு குலசேகரராஜா கோயில் ஆடி கொடை விழா கடந்த 12ம்தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை மற்றும் பொங்கலிட்டு படைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதில் திரளானோர் பங்கேற்று தரிசித்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
+
Advertisement