தூத்துக்குடி, நவ. 19: மாவட்ட அரசு இசைப்பள்ளியில் பகுதிநேர நாட்டுப்புற கலைப்பயிற்சியில் பங்கேற்று தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவியரை மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி பாராட்டினார். கலை பண்பாட்டுத் துறை சார்பாக தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2024-25ம் ஆண்டின் பகுதிநேர நாட்டுப்புற கலைப் பயிற்சி மையத்தில் கிராமியப்பாடல், வில்லுப்பாட்டு, புலியாட்டம், ஒயிலாட்டம் ஆகிய பயிற்சிகளில் பயிற்சி பெற்று தேர்வு எழுதி சான்றிதழ் பெற்ற 31 மாணவ- மாணவியர்களும் மற்றும் பங்கேற்பு சான்றிதழ்களை பெற்ற 9 மாணவ, மாணவியரும் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்தனர். அப்போது அவர், பகுதிநேர நாட்டுப்புற கலைப்பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.மேலும், இசைப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் மாநகர மக்கள் கண்டு களித்து உற்சாகமடையும் வண்ணமாகவும் வாரந்தோறும் மாநகராட்சி பூங்காக்களில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சி நடைபெற்று வருகிறது, என்றார்.
+
Advertisement


