தூத்துக்குடி, நவ. 19: தூத்துக்குடியில் மாவட்ட மைய நூலகத்தில் தேசிய நூலக வாரவிழா மற்றும் இலக்கிய விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட மைய நூலகமும், தொடுவானம் கலைஇலக்கிய பேரவையும் இணைந்து 58வது தேசிய நூலக வாரவிழா மற்றும் இலக்கிய விழாவை மாவட்ட மைய நூலகத்தில் கொண்டாடியது. நிகழ்ச்சியில் மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் ராம்சங்கர் வரவேற்றார். மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சிசுந்தரம், கலைஇலக்கிய ஆளுமைகளின் படங்கள் மற்றும் புத்தக கண்காட்சியை திறந்து வைத்து பேசினார். கருவூலத்துறை ஓய்வுபெற்ற கூடுதல் இயக்குநர் துரைகணேசன் சிறப்புரை ஆற்றினார். ஓய்வுபெற்ற வரலாற்று ஆசிரியர் அல்பர்ட், ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் மாணிக்கவாசகம், ஆகியோர் வாழ்த்திப் பேசினர். செல்வராஜ் நூலகம் பற்றிய கவிதை வாசித்தார். ஓய்வுபெற்ற கருவூலத்துறை அலுவலர் முகமது ஷெரீப், நெல்லை தேவன் எழுதிய வலிகளின் ஊர்வலம் என்ற நூலை திறனாய்வு செய்தார். எழுத்தாளர் நெல்லை தேவன் ஏற்புரை ஆற்றினார். நூலகர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.
+
Advertisement


