களக்காடு, ஆக.19:களக்காடு ஞானசம்பந்தபுரத்தை சேர்ந்தவர் பேச்சியம்மாள் (70). இவர் தனது மகன் முத்துகுமரனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் பேச்சியம்மாள் தனது பேரன் செல்வநம்பியுடன் (5) களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். ஜவகர் வீதியில் வந்த போது, தலையணையில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பேச்சியம்மாள், செல்வநம்பி மீது திடீரென மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம், பக்கதினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பேச்சியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். செல்வநம்பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் களக்காடு இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் சக்திநடராஜன் ஆகியோர் விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த மதுரை மாவட்டம், திருமங்கலம், அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்த பிச்சை முகைதீன் மகன் முகம்மது யாசர் அராபத் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement