வீரவநல்லூர்,ஆக.19: சேரன்மகாதேவியில் நடந்த போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை சப்-கலெக்டர் ஆயுஷ் குப்தா துவக்கி வைத்தார். சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அலுவலகம் மற்றும் கோபாலசமுத்திரம் கிராம உதயம் சார்பில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை சப்-கலெக்டர் ஆயுஷ் குப்தா கொடியசைத்து துவக்கி வைத்தார். சப்-கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி காந்தி பூங்காவில் நிறைவடைந்தது. முன்னதாக சப்-கலெக்டர் முன்னிலையில் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து 200 பேருக்கு மரக்கன்றுகள், மஞ்சள் பைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கிராம உதயம் நிறுவனர் சுந்தரேசன், துணை இயக்குநர் புகழேந்தி பகத்சிங், நிர்வாக மேலாளர் மகேஸ்வரி, பகுதி பொறுப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், முருகன், மரியமிக்கேல், ஜீவா ஜெபமணி, ஆறுமுகத்தாய், குமாரி, அருணா, தலைமை கணக்காளர் சுமிதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
+
Advertisement