Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குளத்தில் மணல் அள்ள எதிர்ப்பு ஆலங்குளம் அருகே கிராம மக்கள் போராட்டம்

ஆலங்குளம்,ஆக.19: ஆலங்குளம் அருகே குளத்தில் மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலங்குளம் அருகே ஓடைமறிச்சான் ஊராட்சி உடையாம்புளி அருகில் கருஞ்சேகரமுடையார் குளம் உள்ளது. சுமார் 72 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளத்தில் கரம்பை மண் எடுக்க தனி நபருக்கு அரசு அனுமதி கொடுத்தனர். ஆனால் அந்த நபர் அதிக அளவில் சரள் மண் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் கையில் பதாகையுடன் குளத்தில் மணல் அள்ளும் இடத்திற்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து ஆலங்குளம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சரள் மணல் எடுக்க நிறுத்தப்பட்ட டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது. இனி இக்குளத்தில் மணல் எடுக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று வருவாய் துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.