கடையம்,நவ.18: கடையத்திலிருந்து ரவணசமுத்திரம் செல்லும் வழியில் இரண்டாற்று முக்கு பகுதியில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடையம் யூனியனுக்குட்பட் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குறுந்தட்டி மாடன் கோவில் அருகே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனருகே ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி மையம் முன்பு தேங்கி வந்ததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.கடந்த 2 மாதங்களாக குழாய் உடைந்ததால் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தினகரன் நாளிதழில் கடந்த 7ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து குடிநீர் குழாய் உடைப்ைப குடிநீர் வாரிய ஊழியர்கள் சீரமைத்தனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
+
Advertisement


