விகேபுரம்,நவ.18: விகேபுரத்தில் அதிமுக சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் இசக்கி சுப்பையா எம்எல்ஏ தலைமை வகித்து பேசுகையில், ‘எஸ்ஐஆர் படிவங்களை சரியாக நிரப்புவதற்கு பொதுமக்களுக்கு உதவ வேண்டும். பாக முகவர்கள் வீடு, வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணியினை சிறப்பாக செய்ய வேண்டும். தேர்தலில் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றிக்கு பாடுபட வேண்டும்’ என்றார். நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் கண்ணன், கலை இலக்கிய மாவட்ட அமைப்பாளர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் இமாக்குலேட், மாவட்ட அதிமுக தொழிற்சங்க அமைப்பாளர் அரிச்சந்திரன், ஜெ பேரவை இணைச் செயலாளர்கள் அருண், குமார் பாண்டியன், முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் கணேச பெருமாள், முன்னாள் கவுன்சிலர் கணேசன், மண்டல தொழில் நுட்ப அணி கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement


