ஏர்வாடி,நவ.18: ஏர்வாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிவறைக்கு போதிய தண்ணீர் வசதி இல்லாததால் மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதைதொடர்ந்து முன்னாள் மாணவிகள் வாட்ஸ்-ஆப் குரூப்பின் மூலம் ஒன்றிணைந்து ரூ.5 லட்சம் நிதி திரட்டி மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்தனர். நேற்று மாணவிகளின் பயன்பாட்டிற்கு முன்னாள் மாணவிகள் திறந்து வைத்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சுமதி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஆசாத் முன்னிலை வகித்தனர். சீனிவாசன் சேவை அறக்கட்டளை லெட்சுமி நாராயணன், முன்னாள் மாணவி சங்க தலைவர் அகமது பாத்திமா, செயலாளர் பரினா, பொருளாளர் பர்ஹானா, தமுமுக மாநில துணை தலைவர் ஹமீது, சமுக ஆர்வலர் சல்மான், அசன், மும்தாஜ் மற்றும் முன்னாள் மாணவிகள், ஆசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement


