சாத்தான்குளம், அக். 17: தட்டார்மடம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பணம், நகை திருடிச்சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர். தட்டார்மடம் அருகேயுள்ள நடுவக்குறிச்சி சண்முகபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமார். இவரும், இவரது மனைவி அன்னலட்சுமி (50) மற்றும் குடும்பத்தினர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர், அங்கு மேஜை டிராயரில் இருந்த 6,500 ரூபாயை திருடினார். சத்தம்கேட்டு கண்விழித்த அன்னலட்சுமி கூச்சலிட்டார். இதையடுத்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 கிராம் நகையையும் மர்மநபர் பறித்துச் சென்றார். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் தட்டார்மடம் ஏட்டு சுடலைமுத்து வழக்கு பதிவு செய்தார். விசாரணை மேற்கொண்டுள்ள எஸ்ஐ ஜெயபால், பணம், நகை பறித்துச்சென்றவரை தேடி வருகிறார்.
+
Advertisement


